"பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்" - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
"பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்" - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் முக்கிய அம்சங்களாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

*பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

*விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

*அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்.

*கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி. கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.

*பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது.

*வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.   என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com