சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களை லட்சாதிபதியாக்க திட்டம் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்

சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களை லட்சாதிபதியாக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களை லட்சாதிபதியாக்க திட்டம் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
Published on

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சகாப்பூரில் பெண்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் மற்றும் கண்காட்சியை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியாவில் 86 ஆயிரம் சுய உதவிக்குழுக்களில் 9 கோடி பெண்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் இந்த சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.6.26 லட்சம் கோடியை அரசு வழங்கி உள்ளது. சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் லட்சாதிபதி ஆக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு ஆகும். இதற்கான பாதையில் நாங்கள் இயங்கி வருகிறோம். லட்சாதிபதி தீதி திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

தானே மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களில் பெண் உறுப்பினர்களின் வருமானம் உயரும், இதனால் மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com