ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
Published on: 

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள அவந்திப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com