காஷ்மீர்: என்கவுன்ட்டரில் பயங்கரவாதி படுகொலை

2 பயங்கரவாதிகளும், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.
காஷ்மீர்
Published on: 

ஸ்ரீநகர்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த வாரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

அதிரடி வேட்டை

இதில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்த பகுதியில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோருடன் இணைந்து போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், லத்தீப் பட் மற்றும் உமர் ஆகிய 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்ட்ட நிலையில், மற்றொரு பயங்கரவாதியை என்கவுன்ட்டர் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த 2 பயங்கரவாதிகளும், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது.

X