

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தொடர் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் பகல் 12 மணியளவில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.
எனினும், தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டர் நீடித்தது. இதில், இன்று மாலை 4 மணியளவில் மற்றொரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். இதனால், காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.