

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி பிரிவில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்தினர் முன் சரணடைந்து உள்ளார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.