

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக இரவும் பகலும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.