காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.
காஷ்மீரில் என்கவுண்ட்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் திரால் அவந்திபோரா பகுதியில் மகாமா என்ற இடத்தில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். பயங்கரவாதியை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரில் சமீப காலங்களாக பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினர், அந்நாட்டு ராணுவ உதவியுடன் எல்லையில் ஊடுருவும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com