காஷ்மீர் என்கவுண்ட்டர் : பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் என்கவுண்ட்டர் : பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com