காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
Published on

ஸ்ரீநகர்

காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்டரில் மொத்தம் எத்தனை பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com