ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
File image
File image
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தச்சிகம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே காலை முதல் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் அங்கு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com