காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

என்கவுன்டர் நடைபெறும் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் கிஷ்ட்வர் மாவட்டம் சதுரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அங்குள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தரப்பிற்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. என்கவுன்டர் நடைபெறும் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com