சுயநலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்குகிறவர்களை அடையாளம் காணுங்கள் - பிரதமர் மோடி

சாதி பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், சுயநலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்குகிறவர்களை அடையாளம் காணுங்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சுயநலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்குகிறவர்களை அடையாளம் காணுங்கள் - பிரதமர் மோடி
Published on

வாரணாசி சென்ற பிரதமர் மோடி 15, 16ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசுகையில், நாம் அனைவரும் குரு ரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய் விட்டது. குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது.

எங்கள் அரசு சாதி, மதம் மற்றும் பிற காரணிகளை பொருட்படுத்தாமல் கல்வி, வருமானம், மருத்துவம், நீர்ப்பாசனம், மக்களின் குறைகளை தீர்த்தல் என்ற 5 தர்மங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதி பாகுபாட்டினை இப்போது வரை சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியவில்லை. புதிய இந்தியா இதில் மாற்றத்தைக் காணப்போகிறது. இளைஞர்களுக்கு உதவப்போகிறது. ஏழை மக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ வழி பிறந்துள்ளது. ஊழல்வாதிகளை எங்கள் அரசு தண்டிக்கிறது. நேர்மையானவர்களுக்கு பரிசு அளிக்கிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com