கடற்படையிலிருந்து ஒய்வு பெறுகிறது ஐஎன்எஸ் விராட் துண்டு, துண்டாக உடைக்க முடிவு

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இன்று முதல் கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
கடற்படையிலிருந்து ஒய்வு பெறுகிறது ஐஎன்எஸ் விராட் துண்டு, துண்டாக உடைக்க முடிவு
Published on


மும்பை,

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். வீராட் மற்றும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா எனும் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐ.என்.எஸ். வீராட், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எனும் பெருமையைப் பெற்றதாகும். ஐஎன்எஸ் விராத் 30 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணிகளுக்கு பயன்பட்டுள்ளது. இக்கப்பல் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே 27 ஆண்டுகள் கடற்படையில் பயன்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பல் 1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது.

ஐ.என்.எஸ். வீராட் உலகின் மிகச் சிறந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இந்த விமானத் தில் இருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்கள் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

1986-ம் ஆண்டு இந்த விமானம் தாங்கி போர்க் கப்பலை இங்கிலாந்திடம் இருந்து இந்தியா வாங்கியது. 1987-ம் ஆண்டு முதல் இன்றுவரை கடந்த 27 ஆண்டுகளாக இந்த கப்பல் இந்திய கடற்படையின் பெரும்பலமாக இருந்தது. குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் வலுவான சக்தி வாய்ந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலாக வீராட் திகழ்ந்தது.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற போதும், இந்தியாவை சுனாமி பேரலைகள் தாக்கிய போதும், இந்திய பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும் வீராட் கப்பல் செய்த சேவை போற்றுதலுக்குரியதாக இருந்தது. இத்தகைய சிறப் புடைய ஐ.என்.எஸ். வீராட் இன்று (திங்கட்கிழமை) கடற்படை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறது.
இதற்கான விழா இன்று மும்பை கடற்படை தளத்தில் நடந்தது. இதில் வீராட் கப்பலின் கமாண்டர்களாக பணிபுரிந்த 22 பேரில் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் உணர்ச்சி பொங்க வீராட் போர்க்கப்பலுக்கு விடை கொடுத்தனர்.

பிரிவுபசார விழாவுக்கு பிறகு வீராட் போர்க்கப்பல் குஜராத் மாநிலத்தில் உள்ள அலங் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு அந்த கப்பலை 4 மாதம் நிறுத்தி வைப்பார்கள். இந்த 4 மாதத்துக்குள் வீராட் கப்பலை யாரும் வாங்கா விட்டால் அதை துண்டு துண்டாக உடைத்து விட முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஆந்திர மாநில அரசு வீராட் கப்பலை வாங்கி விசாகப்பட்டினத்தில் நிறுத்தி மியூசியமாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி தேவைப்படும் என்று மதிப் பிடப்பட்டுள்ளது.இங்கிலாந்திலும், இந்தியா விலும் 60 ஆண்டுகளாக சேவை யாற்றிய வீராட் கப்பல் உடைபடுவதில் இருந்து தப்புமா என்பது இன்னும் 4 மாதங்களில் தெரிந்து விடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com