தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி

மக்கள் பலனடையும் வகையில் தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

கொரோனா தடுப்பூசி தயாரிப்பது மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான சர்ச்சை, அரசியல், குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் போன்றவை நாட்டில் நிகழ்ந்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இப்போது தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம், அதன் நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான, முழுமையான முயற்சி அவசியம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி உற்பத்தி தொடர்பாக எவ்வளவோ அரசியலும், சர்ச்சையும் செய்தாகி விட்டது. அதனால் மக்கள் நிறைய அனுபவித்து விட்டனர். இத்தகைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம். அதன்மூலம் தடுப்பூசி பணியால் மக்கள் அனைவரும் பலன் அடைவார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com