ஹார்முஸ் இடையூறுகளால் இந்தியாவில் எரிசக்தி நிலையற்ற தன்மை; கடற்படை தலைவர்

கடலில் போட்டி என்பது இனி எண்ணெய் மற்றும் எரிசக்தியுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்று அட்மிரல் டிகே திரிபாதி கூறினார்.
ஹார்முஸ் இடையூறுகளால் இந்தியாவில் எரிசக்தி நிலையற்ற தன்மை; கடற்படை தலைவர்
Published on

மும்பை,

இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் டி.கே.திரிபாதி நேற்று இதுகுறித்து கூறியதாவது:- அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்கியது. ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்திய தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையில் அது கொண்டிருக்கும் இறுக்கமான பிடியும் உலகின் எரிசக்தி வினியோகத்தை சீர்குலைத்துள்ளன. இதன் விளைவுகள் மேற்கு ஆசியாவையும் தாண்டி வெகுதூரம் சென்றுள்ளன.

நமது பிராந்தியத்திலும் கடுமையான பொருளாதார பாதிப்பையும், எரிசக்தி நிலை யற்ற தன்மையையும் ஏற்படுத்தி உள்ளன. கடலில் போட்டி என்பது இனி எண்ணெய் மற்றும் எரிசக்தியுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது எதிர்கால வளர்ச்சியை வடிவமைக்கும் வளங்களுக்கும் விரிவடைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com