கேரளா முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் விசாரணைக்கு ஆஜராக வருமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளா முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
Published on

திருவனந்தபுரம்,

பினராயி விஜயன் தலைமையிலான முதல் சிபிஎம் ஆட்சியில் (2016 - 2021) நிதியமைச்சர் ஆக இருந்தவர் பேராசிரியர் தாமஸ் ஐசக் . இவர் கேரளா உட்கட்டமைப்பு நிறுவனத்தின் (கிஃபீ) துணை சேர்மேனாகவும் பதவி வகித்து வந்தார். இவர் பதவி வகித்து வந்த கால அளவில் அன்னிய செலாவணி சட்டத்தை மீறி கிஃபி அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ். கட்சியும் புகார்களை வெளியிட்டிருந்தனர்.

இது குறித்து அமலாக்கப்பிரிவு இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வருமாறு இதற்கு முன் பேராசிரியர் தாமஸ் ஐசக்கிற்கு ஏற்கனவே அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அப்போது அவர் விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து தற்போது அவர் விசாரணைகாக வருமாறு அழைப்பு விடுத்து கொச்சியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வருகிற 11- ஆம் தேதி காலை 10 மணி அளவில் கொச்சியில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் தாமஸ் ஐசக் ஒரு பேட்டியின் போது தான் சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை என்றும் , ஆகவே இது போன்ற விசாரணைக்கு பயப்பட மாட்டேன் என்றும் சட்டப்படி அதனை எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வருகிற 11-ஆம் தேதி அன்று இவரோடு விசாரணைக்கு ஆஜராக வருமாறு அவருக்கு இரண்டாம் முறையாக அமலாக்க பிரிவு நோட்டீஸ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com