ராகுல்காந்தி பயணித்த விமானத்தில் என்ஜின் கோளாறு

டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு ராகுல் காந்தி சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.
ராகுல்காந்தி பயணித்த விமானத்தில் என்ஜின் கோளாறு
Published on

பாட்னா,

பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற விமானத்தில் ராகுல்காந்தி சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் டெல்லிக்கே விமானம் திரும்பியது. இதனால், பீகார், ஒரிசா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் தாமதமாகும் எனவும் அசவுகரியத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com