வீட்டின் மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்த பொறியாளர் கைது

கைது செய்யபட்ட பொறியாளர் இடமிருந்து 17 கஞ்சா செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வீட்டின் மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்த பொறியாளர் கைது
Published on

ஐதராபாத்,

தெலுங்கான மாநிலம் ஐதராபாத் அருகே சசிதர் என்கிற நபர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்பட்டதை அடுத்து அவர் வேலையை விட்டு விலகினார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக சசிதரை மதுவிலக்கு மற்றும் கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 கஞ்சா செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, கலால் மற்றும் மதுவிலக்குத் துறையின் உதவி ஆணையர் ஆர்.கிஷன் கூறுகையில் “பணியில் இருந்தபோது, ​​சசிதர் தனது முழு சம்பளத்தையும் கஞ்சாவுக்காகச் செலவழித்தார். தற்போது, ​​கஞ்சா வாங்குவதற்கு வழியில்லாததால், அவர் சில விதைகளை வாங்கி, தனது வீட்டின் மொட்டை மாடியில் தொட்டிகளில் கஞ்சா செடிகளை வளர்க்கத் தொடங்கியுள்ளார்,” என்று கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com