டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை: அக்டோபருக்குள் முடியும் என தகவல்


டெங்கு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை: அக்டோபருக்குள் முடியும் என தகவல்
x
தினத்தந்தி 14 July 2025 7:26 AM IST (Updated: 14 July 2025 8:26 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய தடுப்பூசி நிறுவனமான பனேசியா பயோடெக் நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசியான இதற்கு டெங்கிஆல் என பெயரிடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவத்துறை சோதனைக்காக 10,500 பேர் தேர்வு செய்யப்பட்டு இதுவரை 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. புனே, சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் புவனேஸ்வரை மையமாக கொண்டு இந்த பரிசோதனை நடந்து வருகிறது.

இந்த பரிசோதனை அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியுள்ளது. தடுப்பூசியின் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் எந்தவித பாதுகாப்பு பிரச்சினைகளும் இல்லாத நிலையில், 3-ம் கட்டத்தில் பங்கேற்றிருப்போரை 2 ஆண்டுகளுக்கு கண்காணிக்க உள்ளதாக தேசிய தொற்றுநோயியல் நிறுவன இயக்குனர் டாக்டர் மனோஜ் முரேகர் தெரிவித்தார். இந்த சோதனை மூலம் தடுப்பூசியின் செயல் திறன் மதிப்பிடப்படும் என்றும் அவர் கூறினார்.

1 More update

Next Story