

12 லட்சத்து 83 ஆயிரம் பேரில், 8 லட்சத்து 11 ஆயிரம் பேர் முதல்முறையாக சேர்ந்துள்ளனர். 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் வைப்புநிதி அமைப்பில் இருந்து விலகி விட்டு, வேறு வேலையில் சேர்ந்து மீண்டும் அமைப்பில் சேர்ந்துள்ளனர். வயது அடிப்படையில் பார்த்தால், புதிதாக சேர்ந்தவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், பெண்கள் ஆவர்.