

புதுடெல்லி,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்.) அமைப்பில் கொள்கை முடிவுகளை எடுக்கும் மத்திய அறக்கட்டளை வாரிய கூட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்க்வார் தலைமையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019-2020-ம் நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அறக்கட்டளை வாரியத்தின் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டபடி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-2020-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டதாக தொழிலாளர் நல அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.