பிரதமரின் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நன்கொடை

பிரதமரின் நிவாரண நிதிக்கு, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் (EPFO) ரூ.2.5 கோடி நன்கொடை அளிக்க உள்ளனர்.
பிரதமரின் நிவாரண நிதிக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நன்கொடை
Published on

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது.

இதில் தங்களால் இயன்ற நிதியை நிவாரணமாக வழங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, தனி நபர், தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என, நிதி வழங்கி வருகின்றன. பொதுத் துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களும், தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.2.5 கோடியை பி.எம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக அளிக்க உள்ளனர்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com