பெண்களுக்கு சரிபாதி அதிகாரம்: தேஜஸ்வி யாதவ்

நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சரிபாதி அதிகாரம்: தேஜஸ்வி யாதவ்
Published on

புது டெல்லி,

சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2029 பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் அமலுக்கு வருவதை உறுதிசெய்ய முடியும்.

தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாரி சக்தி வந்தன் அதினியம் எனும் தார்மீக கேடயத்தை பிடித்துக்கொண்டு, தொகுதி வரையறை என்ற போர்வையில், முன்னர் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்தாமலேயே திருத்தி, அரசியலமைப்பையும் கூட்டாட்சி அமைப்பையும் பலவீனப்படுத்தும் நோக்கத்தில், கூட்டப்பட்ட சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு நடைபெற்ற இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி கூட்டத்தில் தேஜஸ்வி பங்கேற்றார்.

நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். மக்கள் தொகையில் பாதியான பெண்களுக்கு 33 சதவிதம் அல்ல, 50 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டிற்குள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதாவது, இட ஒதுக்கீட்டு பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கும் கட்டாயமாக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com