மும்பை பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ் 393 புள்ளிகள் சரிவு!

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17,716 புள்ளிகளாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ் 393 புள்ளிகள் சரிவு!
Published on

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில், இன்று சென்செக்ஸ் 393.01 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 91.40 புள்ளிகள் குறைந்தும் காணப்படுகின்றன.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 393.01 புள்ளிகள் குறைந்து, (0.66 சதவீதம் சரிந்து) 59,217.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 91.40 புள்ளிகள் குறைந்து, (0.51 சதவீதம் சரிந்து) 17,716.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஹச் டி எப் சி நிறுவன பங்குகள், தொடர்ந்து 3 நாட்களாக வீழ்ச்சிப்பாதையில் வர்த்தகமாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com