2-வது திருமணத்திற்கு தடையா? அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை!

அசாம் மாநிலத்தின் அரசு ஊழியர்களுக்கு திருமணம் குறித்த முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2-வது திருமணத்திற்கு தடையா? அரசு ஊழியர்களுக்கு பறந்த திடீர் சுற்றறிக்கை!
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மக்களிடையே. தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு அரசின் அனுமதி கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை அனைத்து ஆண்,பெண் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த விதியை மீறினால் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஊழியர் மீது அபராதம், பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com