

புதுடெல்லி,
ஜிசாட் - 9 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானை தவிர்த்த சார்க் நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசினர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-, சார்க் நாடுகளுக்கு தேவைப்படும் தகவல்கள் செயற்கைகோள் மூலம் வழங்கப்படும். ஜிசாட்டிலிருந்து பெறப்படும் தகவல்கள் தெற்கு ஆசிய நாடுகளுக்கு பயன்தரும். அமைதி, வளர்ச்சி ஆகியவை மூலம் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்துள்ளன. செயற்கை கோள் விண்ணில ஏவப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். பேச்சுவார்த்தைக்கும் செயலுக்கும் இந்த செயற்கைகோள் பாலமாக உள்ளது. இயற்கைக்கு எல்லைகள் கிடையாது என்றார்.
பூடான் பிரதமர் தோபே பேசுகையில், தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இந்த செயற்கைகோள் பொருளாதாரம் வளர்ச்சி பெற உதவும் என்றார்.ஆப்கன் அதிபர் கயானி பேசும்போது, தெற்கு ஆசிய வளர்ச்சிக்கு தங்கள் நாடு உதவும். நமக்குள்ள நட்பு மூலம், ஏழை மக்கள் வளர்ச்சிபெற உழைக்க வேண்டும். என்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் மோடியை பாராட்டுவதாக கூறினார்.மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் பேசுகையில், இந்த பிராந்தியத்திற்கு விலையில்லா பரிசாக இந்த செயற்கை கோள் உள்ளது. இதற்காக இந்தியாவிற்கு கடமைப்பட்டுள்ளோம். வர்த்தகத்தை மேம்படுத்த உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அதிபர் சிறிசேன பேசுகையில், சார்க் நாடுகள் பயன்பாட்டிற்காக தெற்காசிய செயற்கை கோள் அனுப்பப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சார்க் நாடுகளின் ஒத்துழைப்புக்காக நட்புறவை வளர்ப்பதற்கான நோக்கத்தை குறிக்கிறது என்றார்.