

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலி வழியே மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் இன்று பேசும்பொழுது, கொரோனா வைரசுக்கு எதிரான போர் என்பது மக்கள் சார்ந்தது.
இதுபோன்ற தருணங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவ முன்வருகின்றனர். இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும்.
அது தொழில், அலுவலகம், கல்வி மற்றும் மருத்துவம் என எந்த பிரிவாகட்டும். கொரோனா வைரசுக்கு பின்னான உலகத்தில் ஒவ்வொருவரும் மாற்றங்களுக்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர். கொரோனா வைரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போர் வீரராக செயல்பட்டு போராடி வருகிறார் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.