

புதுடெல்லி,
சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் இணைய வேண்டும். விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மத்திய அரசால் அடுத்து ஊடகங்கள் குறிவைக்கப்படலாம். ஊடகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் விவசாயிகளுடன் இணைய வேண்டும் என்றார்.