பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியத்தின் பதவிக்காலமும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் பதவிக்காலம் வரை அவர் பதவியில் நீடிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக 6 ஆண்டுகள் பதவி வகித்த சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில்தான் அவருக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியத்தின் பதவிக்காலமும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான பிவிஆர் சுப்ரமணியம் கடந்த 2023 ஆம் ஆண்டு நிதி ஆயோக் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பதவிக்காலத்துடன் அவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் நிறைவு பெற்றது. இதையடுத்து மேலும் ஒராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com