சசிகலா உடல் நிலை சீராக உள்ளது:விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், நேற்று இரவு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகரித்து உள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடலில் சர்க்கரை அளவும் 278 ஆக உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சசிகலா உடல் நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா உடல் நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. சசிகலா உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com