கறுப்புப் பணம்: ஐமுகூ காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது -நிதி அமைச்சகம்

கடந்த ஐமுகூ ஆட்சிக்காலத்தில் மூன்று வெவ்வேறு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட கறுப்புப்பணம் மீதான அறிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.
கறுப்புப் பணம்: ஐமுகூ காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை அரசு பரிசீலிக்கிறது -நிதி அமைச்சகம்
Published on

புதுடெல்லி

இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி இந்த அறிக்கையின் விவரங்களை கேட்டப் போது அவை பரிசீலனையில் இருக்கின்றன என்றும் அவை நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8 (1) (சி) , 2005 இன்படி அறிக்கையின் விவரங்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் உரிமையை மீறுவதாக அமையும் என்பதால் அரசு கொடுக்க மறுத்துள்ளது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் எவ்வளவு கறுப்புப்பணம் இருக்கிறது என்பதை அறிய இந்த நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் குளோபல் பினான்ஷியல் இண்டெக்ரிடி எனும் நிறுவனம் 2005-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 770 பில்லியன் டாலர்கள் அளவிலான கறுப்புப்பணம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது என்று கணக்கிட்டு கூறியது. அதே காலகட்டதில் 165 பில்லியன் டாலர் கறுப்புப்பணம் இந்தியாவை விட்டு வெளியேறியது என்றும் அந்த அமைப்பு கணக்கிட்டு கூறியுள்ளது. ஆனால் இவ்வளவு கறுப்புப்பணம் இந்தியாவில் உருவாகிறது என்பது போன்ற உறுதியான மதிப்பீட்டுத் தகவல்கள் இதுவரையில் அதிகாரபூர்வமாக கணிக்கப்படவில்லை.

அரசு இந்த நிறுவனங்களை கறுப்புப்பணம் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து அளிக்கவே நியமித்தது. இவை அதன் அறிக்கைகளை 2013-2014 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்தன. அவை கணக்கில் வராத வருமானத்தின் அளவை கண்டறிதல், பண மோசடி பரிவர்த்தனை (கறுப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள்) அவற்றை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வாறு நடத்துகிறார்கள் போன்றவற்றை ஆராயும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன.

ஆய்வு நடத்திய நிறுவனங்களில் என் ஐ பி எஃப் பி யும், என் ஐ எஃப் எம் பும் நிதியமைச்சகத்தினால் நடத்தப்படும் தன்னாட்சி நிறுவங்களாகும். மற்றொரு நிறுவனமான என் சி ஏ இ ஆர் அரசின் கொள்கைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் நிறுவனமாகும். இது இந்தியாவின் பழைமையான, பெரிய, லாப நோக்கமற்ற, சுதந்திரமான நிறுவனமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com