ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல்: விசாரணைக்கு கோர்ட்டு ஒப்புதல்

ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரிய மனு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல்: விசாரணைக்கு கோர்ட்டு ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் விசாரணை அதிகாரியிடம் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10-11 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு விதித்திருந்தது.

இந்தநிலையில் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் விசாரணை அதிகாரியிடம் திங்கள் மற்றும் வியாழன்தோறும் ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக்கோரி மணீஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு இன்று ஏற்றுக்கொண்டது. அப்போது சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு 60 முறை ஆஜராகியுள்ளார் என்று தெரிவித்தார். இதையடுத்து மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com