ஆபாச வீடியோ கால், மற்றும் மாடல் அழகி மூலம் இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு வலைவிரிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை

ஆபாச வீடியோ கால், மற்றும் மாடல் அழகி மூலம் இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு வலைவிரிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆபாச வீடியோ கால், மற்றும் மாடல் அழகி மூலம் இந்திய இளம் விஞ்ஞானிகளுக்கு வலைவிரிக்கும் பாகிஸ்தான் உளவுத்துறை
Published on

புதுடெல்லி

பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தனர்.

கவர்ச்சியான பெண்கள் மூலம் இந்திய ராணுவ வீரர்களை கவர்ந்து அவர்களிடம் இருக்கும் ரகசியங்களை சேகரிக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் நாடு ஈடுபட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் இதே போன்ற வலையில் சிக்கி உள்ளார். பாகிஸ்தான் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணை தகவல் அனுப்பி உள்ளார். உத்தரபிரதேச, மாராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ராணுவத்தின் உளவுப்பிரிவுடன் இணைந்து அவரை கைது செய்து உள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட முகவரியுடன் தனது தகவல் தொடர்பைக் காட்டும் அவரது கணினியிலிருந்து சில தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்தும் இந்திய ராணுவ வீரர்கள்தான் இந்த ஹேக்கர்களின் இலக்கு. சீன மொபைல்களை பயன்படுத்தும் ராணுவ அதிகாரிகள் சீனாவின் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதில் ஆபாச இணையதளங்களைப் பார்வையிடும் அதிகாரிகளை சமூக வளைதளங்கள் மூலம் போலி பெண் முகவரி மூலம் அறிமுகமாக நட்பை வளர்க்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அப்படி பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் பாகிஸ்தானியப் பெண்கள் உருது அல்லது ஹிந்தி மொழியிலும், சீனப்பெண்கள் ஆங்கிலத்திலும் உரையாடுவதாக கூறப்படுகிறது. ஆபாச வீடியோக்கள் அனுப்பி அவர்களுக்கு வலை விரிக்கிறார்கள்.

பேஸ்புக், வாட்ஸ் அப்பில் நட்பை வளர்க்கும் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு ரெஸ்டாரெண்ட், அல்லது ஷாப்பிங் மாலுக்கு அழைத்து சந்திப்பை உருவாக்குவதாக தெரிய வந்துள்ளது.

முதல் சந்திப்பிலேயே பாலியல் ஆதாயத்துடன் பேசி அதிகாரிகளை கவர முயற்சிப்பதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த வீடியோக்களை வைத்து சமந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டி ராணுவ ரகசியத் தகவல்களை பெற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

அகர்வால் இது போல் பாகிஸ்தானில் இருந்து பெண்கள் கூறப்பட்டுள்ள இரண்டு சமூக ஊடகக் கணக்குகளோடு தொடர்பு கொண்டுள்ளார். அதில் இருந்து அவருக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளது. அகர்வால் உத்தரகண்ட்டில் ரூர்கி ஐஐடி முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 4 வருடங்களாக நாக்பூரில் பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றது.

அவரது சமூக ஊடக கணக்கில் 2017-18 ஆண்டுக்கான இளம் அறிவியலாளர் விருதினைப் பெற்றுள்ளதை காட்டும் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருந்தார். உபி போலீசார் கான்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதுடன், அகர்வாலின் இரண்டு மடிக்கணினிகளை கைப்பற்றி உள்ளது .

சில தகவல்களை தொடர்ந்து அகர்வால் வீட்டில் மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com