6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உறவினருக்கு தூக்கு தண்டனை: உத்தரபிரதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உறவினருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உறவினருக்கு தூக்கு தண்டனை: உத்தரபிரதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவரை அவரது உறவினரான பப்லு என்ற அர்பத் என்பவர் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார். அர்பத்தின் வீட்டு படுக்கை அறையில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக அர்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சுமார் 4 மாதங்களாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றவாளி பப்லு என்ற அர்பத்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அரவிந்த் மிஸ்ரா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு விவகாரம் லக்னோவில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com