இமாசல பிரதேசம்- குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்...? கருத்து கணிப்புகள்

இமாச்சலத்தில் தொங்கு சட்டசபை குஜராத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறும் கருத்துகணிப்புகள் தெரிவித்துள்ளன
இமாசல பிரதேசம்- குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்...? கருத்து கணிப்புகள்
Published on

புதுடெல்லி

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.

189 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது.

குஜராத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, செய்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிடத் தொடங்கின. அதில், குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 117 முதல் 140 இடங்களும், காங்கிரசுக்கு 34 முதல் 51 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 6 முதல் 13 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி 9 குஜராத்தில் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 125 முதல் 130 இடங்களும், காங்கிரசுக்கு 40 முதல் 50 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிப்போப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 128 முதல் 148 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 2 முதல் 10 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 129 முதல் 151 இடங்களும், காங்கிரசுக்கு 16 முதல் 30 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 9 முதல் 21 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 110 முதல் 125 இடங்களும், காங்கிரசுக்கு 45 முதல் 60 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 1 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாசலபிரதேசம்

இமாசலபிரதேச தேர்தலில் நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.கவுக்கு 32 முதல் 40 இடங்களும், காங்கிரசுக்கு 27 முதல் 34 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், டைம்ஸ் நவ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.கவுக்கு 38 இடங்களும், காங்கிரசுக்கு 28 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஜ் தக் ஆக்சிஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 24 முதல் 34 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியா டுடே நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 24 முதல் 34 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதில், இழுபறி நிலவும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணப்பில் தெரியவந்துள்ளது.

ரிப்போப்ளிக் மார்க் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பா.ஜ.க.வுக்கு 34 முதல் 39 இடங்களும், காங்கிரசுக்கு 28 முதல் 33 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com