

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. தேசிய துணை தலைவராக இருப்பவர் சிவராஜ் சிங் சவுகான். இவரது தந்தை பிரேம் சிங் சவுகான் (வயது 82). கடந்த இரு நாட்களுக்கு முன் உடல்நல குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரேம் சிங் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி கமல் நாத், முன்னாள் முதல் மந்திரி கைலாஷ் ஜோஷி, பா.ஜ.க. துணை தலைவர் பிரபாத் ஜா, காங்கிரஸ் பொது செயலாளர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிவராஜ் சிங் சவுகான் மும்பைக்கு சென்றுள்ளார். பிரேம் சிங்கிற்கு சவுகான் உள்பட 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.