சசிகலா இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
சசிகலா இன்று டிஸ்சார்ஜ்: மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.

இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்' ஆகிறார். ஆனாலும் ஒருவாரம்தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருக்கிறார்.

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் வருகையும் அதிகரித்து இருப்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com