சீரம் நிறுவனத்தின் ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசிக்கு அவரசகால அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை

12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசிக்கு அவரசகால அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசிக்கு அவரசகால அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை
Published on

புதுடெல்லி,

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 12 முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அவசரகால கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தது.

சீரம் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஏற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கக்கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பரிந்துரை செய்தது.

அதன்படி தற்போது கோவோவாக்ஸ் தடுப்பு மருந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு மட்டுமின்றி பிற உலக நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com