கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளியை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழு பரிந்துரை

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கான இடைவெளியை அதிகரிப்பது குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான இடைவெளியை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழு பரிந்துரை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்ட் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் 2 தவணைகளாக செலுத்தப்படுகின்றன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொணட பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கோவேக்சின் தடுப்பூசிக்கான இடைவெளி 28 நாட்களாக உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான இடைவெளி 45 நாட்களாக இருந்த நிலையில் பின்னர் 3 மாதமாக அதிகரிக்க பரிந்துரைக் குழு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான மத்திய நிபுணர் குழு, தடுப்பூசிக்கான கால இடைவெளி குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவித்த சில பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* முதல் தவணை தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமடைந்து 3 மாதங்களுக்குப் பிறகே இரண்டாவது தவணை தடுப்பூசியை போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு வேறு ஏதேனும் தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி பெற்று கொள்வதை 4 முதல் 8 வாரங்கள் வரை ஒத்தி வைக்க வேண்டும்.

* பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

* கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு இரத்த தானம் செய்யலாம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஆர்.டி-பி.சி.ஆர். சோதனையில் தொற்று இல்லை என்று உறுதியான பிறகு இரத்த தானம் செய்யலாம்.

* தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன் தடுப்பூசி பெறுபவர்களுக்கு ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் செய்யத் தேவையில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com