கர்நாடகா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

வெடி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கரிகடி கிராமத்தில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2022ம் ஆண்டு விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டது.

ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி எதுவும் நடைபெறாத நிலையில் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற உரிமையாளர் முடிவெடித்தார். அதன்படி தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கையை தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரசாயன தொழிற்சாலையில் உள்ள ரசாயன தொட்டியை (டேங்க்) சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயன தொட்டி எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் ரசாயன தொட்டியில் இறங்கி வேலை செய்து வந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த வெடிவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com