

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மிர்காச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட டகியா பகுதியை சேர்ந்தவர் முன்னா தேவி (வயது 35). பட்டாசு தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரான இவர் தனது வீட்டில் ஏராளமான பட்டாசுகளை வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சமையல் செய்வதற்காக அடுப்பை பற்றவைத்தபோது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டது. இதனால் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் வீட்டில் இருந்த முன்னாதேவி மற்றும் அங்கிருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். முன்னாதேவியின் மகள்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.