ஆய்வு கூடத்தில் வெடி விபத்து: விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம்

ஆய்வு கூடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆய்வு கூடத்தில் வெடி விபத்து: விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் நேற்று குப்பைகளில் கிடந்த வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஸ்ரீநாத், நவ்யா உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். வெடிப்பொருட்களில் வேதிப்பொருட்களை கலந்து ஆய்வு செய்தபோது, திடீரென்று வேதிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் விஞ்ஞானிகள் உள்பட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து மடிவாளா விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com