தானேவில் பெருமளவு வெடிப்பொருட்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது

மராட்டிய மாநிலம் தானேவில் பெருமளவு வெடிப்பொருட்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது.
தானேவில் பெருமளவு வெடிப்பொருட்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது
Published on

தானே,

சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ரெயில்வே போலீஸ் வெடிப்பொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ய பயன்படுத்தப்படும் பொருட்களை தானேவில் பறிமுதல் செய்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமாக மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது. குற்றப்பிரிவு போலீஸ், ரெயில்வே போலீஸ் மற்றும் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு உளவுத்துறை ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதனையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து மும்பாரா பகுதியில் 15 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அமோனியம் நைட்ரேட் கண்ணிவெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மும்பையில் முன்னதாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுபோன்ற வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com