

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி இதை தாக்கல் செய்தார்.
முன்னாள் பிரதமர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை ரத்து செய்ய இந்த மசோதா வழி வகுக்கிறது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.