கோதுமை ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும் - இந்திய உணவு கழகம் தகவல்

கோதுமை ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும் என்று இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய உணவு கழக தலைவர் அசோக் கே.மீனா நிருபர்களுக்கு அளித்த பட்டியில் கூறியதாவது:-

உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும்.

சமீபத்திய மழையால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படாது. கோதுமை உற்பத்தி இலக்கு நிச்சயமாக எட்டப்படும். கோதுமை கொள்முதல் செய்யும் பணி நாடு முழுவதும் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com