புதியவகை கொரோனா எதிரொலி: இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு

இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதியவகை கொரோனா எதிரொலி: இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த சுழலில் இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 20ஆக உயர்ந்துள்ளது. புதிய வகை வைரசில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டரில், 2021 ஜனவரி 7 ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கண்டிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட மறுதொடக்கம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com