மத்திய அரசு ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு

மத்திய அரசு ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுதோறும் தமது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஓய்வூதியர்கள் கடந்த நவம்பர் 30-ந்தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆக நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார். கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, மூத்த குடிமக்களின் கஷ்டத்தை குறைக்கும்விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஓய்வூதியர்களுக்கான, முகம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை ஜிதேந்திர சிங் கடந்த வாரம் தொடங்கிவைத்தார். உயிர்வாழ் சான்றிதழுக்கான இந்த புதிய தொழில்நுட்பம், 68 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமின்றி, கோடிக்கணக்கான மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் இது பயனளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com