வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
Published on

சென்னை:

வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைபவர்களுக்கான கால அவகாசத்தை, மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com