

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.), சரக்கு விமான போக்குவரத்தை இந்த தடை கட்டுப்படுத்தாது எனவும் கூறியுள்ளது. அதைப்போல டி.ஜி.சி.ஏ. அனுமதித்துள்ள பயணிகள் விமான போக்குவரத்தும் இந்த தடையால் பாதிக்காது எனவும் கூறியுள்ளது.
அது மட்டுமின்றி சர்தேச அளவில் திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதிபெற்ற அதிகாரியின் அனுமதியுடன் இயங்கும் எனவும் டி.ஜி.சி.ஏ. தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.